பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோன் விமானத்தை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப்படையினர்


பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோன் விமானத்தை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப்படையினர்
x
தினத்தந்தி 7 March 2022 12:13 PM IST (Updated: 7 March 2022 12:55 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானிலிருந்து இன்று அதிகாலை வந்த டிரோன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது.

பஞ்சாப்,

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செக்டாரில் உள்ள சர்வதேச பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து அதிகாலை 3 மணியளவில் இந்தியப் பகுதிக்கு டிரோன் விமானம் ஒன்று பறந்துவரும் சத்தத்தை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கேட்டனர். 

இதையடுத்து எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் டிரோன் வரும் பகுதியில் பாரா வெடிகுண்டுகள் மூலம் வெளிச்சத்தை உருவாக்கி, பின் டிரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.

இதனையடுத்து டிரோன் விமானத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு பச்சை நிறப் பையையும் கைப்பற்றினர். அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் கடத்திவரப்பட்டது  தெரியவந்தது. 

கடத்தல் பொருளின் மொத்த எடை சுமார் 4.17 கிலோ வரை இருந்ததாக எல்லை பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


Next Story