சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீடு மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 March 2022 12:49 PM IST (Updated: 8 March 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீடு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

புதுடெல்லி, 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நே‌ஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூன் முதல் சிறையில் உள்ள அவர், கடந்த அக்டோபரில் அளித்த புகாரில் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு, சாமியார் என கூறிக்கொள்ளும் மனுதாரருக்கு எதிரான புகார்களின் தன்மை, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில்கொண்டும், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது என்பதாலும், ஜாமீன் வழங்க முடியாது என கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அந்த உத்தரவை எதிர்த்து சிவசங்கர் பாபா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.

Next Story