மேற்கு வங்க ஆளுநருடன் முதல் மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு
மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் - முதல் மந்திரி மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்கர் - முதல் மந்திரி மம்தா பானர்ஜி இடையே அரசியல் ரீதியாக பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்காள சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் ஜெகதீப் தன்கர் உரையாற்ற முடியாத அளவுக்கு எதிர்கட்சியான பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வன்முறை நடைபெற்றதாக கூறி பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story