உத்தரப்பிரதேச மாநில இறுதிக்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், மீதமிருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையிலிருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அதன்படி, இன்று மதியம் 3 மணி நிலவரப்படி அங்கு 46.40 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சண்டௌலி - (50.75%), சோன்பத்ரா - (49.82%) மற்றும் பதோஹி - (47.50%) தொகுதிகளில் அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்து இருந்தது.
இந்த நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story