தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியீடு: உ.பி.யில் பாஜக, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி...


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியீடு: உ.பி.யில் பாஜக, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி...
x
தினத்தந்தி 7 March 2022 6:50 PM IST (Updated: 7 March 2022 6:50 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுடெல்லி

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் இன்று (மார்ச் 7 ந்தேதி) வரை சட்டசபை தேர்தல்கள் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்றன

 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தர சட்டசபைக்கு சட்டசபைக்கு ஏழு கட்டங்களாகவும்,60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூரின்  சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கும், உத்தரகாண்டின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும், கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த் 4 மாநிலங்களில் 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர  நான்கில் பாஜக ஆட்சியில் நடைபெற்றது. அதே நேரத்தில் பஞ்சாபில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் இந்த முறிஅ கடும் போட்டியை சந்திக்கிறது. 

2017 உத்தரபிரதேச  தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜனதா  312 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 47 இடங்களையும், பகுஜன் சமாஜ் 19 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும் கைப்பற்றியது.

பஞ்சாபில், முந்தைய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 117 இடங்களில் 77 இடங்களை வென்றது, அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி20, அகாலி தளம் 15 மற்றும் பா.ஜனதா 3. பஞ்சாபில் மீண்டும் ஆட்சிக்கு வர, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி  தலைமையிலான காங்கிரஸ் கடும் போட்டியை சந்தித்து வருகிறது.

உத்தரகாண்டில்  2017 இல் பா.ஜனதா 70 இடங்களில் 56 இடங்களை வென்றது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 11 இடங்களை வென்றது.

மணிப்பூரில் முந்தைய சட்டசபை தேர்தலில்  மொத்தம் உள்ள 60 இடங்களில் பா.ஜனதா  21 இடங்களையும், காங்கிரஸ் 28 இடங்களையும் வென்றது.

2017 கோவா தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் பா.ஜனதா க 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றது.

2022 சட்டமன்றத் தேர்தலலிங்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று மாலை வெளியானது அதன் விவரம் வருமாறு :-

ரீபப்ளிக் டிவி

உத்தரபிரதேசம்:- 

பா.ஜனதா   - பாஜக + 262- 277

சமாஜ்வாதி கட்சி -119-134

பகுஜன் சமாஜ்   -  7-15

காங்கிரஸ்   - 3-8

இந்தியா டுடே கணிப்பு

பஞ்சாப் 

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என இந்திய டூடே கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.  ஆம் ஆத்மி கட்சி 76-90 இடங்களை கைப்பற்றும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரகாண்ட் (ரிபப்ளிக் டிவி)

காங்கிரஸ்:  33-38
பாஜக: 29-34
பகுஜன் சமாஜ் 1-3 
பிற கட்சிகள் 1-3

உத்தரகாண்ட்

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

பாஜக -37 

காங்கிரஸ்- 31
ஆம் ஆத்மி -1
மற்றவை -1

ஏபிசி வோட்டர் 

பாஜக -26-32
காங்கிரஸ்- 32-38
ஆம் ஆத்மி -2
மற்றவை 3-7


Next Story