மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி திடீர் சந்திப்பு
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்று மாலை புதுடெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. கடந்த மாதம் தொடங்கிய 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு பல கட்டங்களுக்கு பிறகு இன்று நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்று மாலை புதுடெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்,"அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் அளித்த தீர்ப்பு வரும் 10 ஆம் தேதி தெரிந்துவிடும். மக்களின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.
#WATCH | Punjab CM Charanjit Singh Channi arrives at the residence of Union Home Minister Amit Shah in Delhi. pic.twitter.com/WFQEVgDqPf
— ANI (@ANI) March 7, 2022
பின்னர் உக்ரைனில் உள்ள பஞ்சாப் மாணவர்கள் குறித்து பேசிய அவர்,"பஞ்சாப்பை சேர்ந்த 997 மாணவர்களில் 420 பேர் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பியுள்ளனர்.200 பேர் தற்போது போலந்தில் உள்ளனர். தற்போது அங்கு இருக்கும் மற்ற மாணவர்கள் விரைந்து நாடு திரும்புவார்கள் என உள்துறை மந்திரி அமித் ஷா வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story