மராட்டிய மந்திரி நவாப் மாலிக் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு


மராட்டிய மந்திரி நவாப் மாலிக் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 7 March 2022 9:28 PM IST (Updated: 7 March 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

மந்திரி நவாப் மாலிக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


மும்பை,

மந்திரி நவாப் மாலிக் கடந்த மாதம் 23-ந் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளிடம் இருந்து முறைகேடாக சொத்துக்கள் வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இதில் அவர் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வந்தார். இதில் விசாரணைகாலம் முடிந்து அமலாக்கத்துறை அவரை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஆர்.என். ரோகடே முன் ஆஜர்படுத்தியது.

இதில் நீதிபதி நவாப் மாலிக்கை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அமலாக்கத்துறை காவலில் இருந்து ஜெயிலில் அடைக்கப்பட உள்ளார். இதற்கிடையே தனக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய கோரி நவாப் மாலிக் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் மும்பை ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story