ரஷியா, உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்களை பிரதமர் மோடி நேற்று தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நேற்று 12-வது நாளாக நீடித்தது.
இதனால் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மோடி பேசினார்
‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்து வரும் இந்த மீட்பு பணிகளுக்கு உதவுமாறு ரஷியா மற்றும் உக்ரைனை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. குறிப்பாக ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களை பிரதமர் மோடி தொலைபேசி வழியாக அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
அந்த வகையில் போர் தொடங்கியபின் 2-வது முறையாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 35 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது, உக்ரைன் போர் நிலவரம் மற்றும் ரஷியாவுடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடம் ஜெலன்ஸ்கி விளக்கினார்.
நேரடி பேச்சு நடத்த வலியுறுத்தல்
இந்த போர் மற்றும் அதன் விளைவாக எழுந்துள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை வெளியிட்டார். அத்துடன் தாக்குதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் வலியுறுத்தினார்.
குறிப்பாக, பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வையே இந்தியா எப்போதும் ஆதரிக்கும் என தெரிவித்த மோடி, அந்த வகையில் இரு தரப்பும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி
பின்னர் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உக்ரைன் வழங்கி வரும் உதவி களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
அங்கு இன்னும் மீதமிருக்கும், குறிப்பாக கடுமையான போர் நடந்து வரும் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்த உரையாடலின்போது, உக்ரைனுக்கு இந்தியா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு பிரதமர் மோடியிடம் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடனான பேச்சு குறித்து ஜெலன்ஸ்கி பின்னர் தனது டுவிட்டர் தளத்தில், ‘ரஷியாவின் படையெடுப்புக்கு உக்ரைன் அளித்து வரும் பதிலடி குறித்து இந்திய பிரதமரிடம் எடுத்துரைத்தேன். இந்த போர் சூழலில் இந்திய குடிமக்களுக்கு அளித்து வரும் உதவிக்காகவும், உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் காட்டும் உறுதிப்பாட்டுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். உக்ரைன் மக்களுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுக்காக நன்றி தெரிவித்தேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.
புதினுடன் பேச்சு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான உரையாடலுக்கு பின் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த உரையாடல் 50 நிமிடங்கள் நீடித்தது.
இந்த உரையாடலின்போது ராணுவ தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் நிலவி வரும் சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அத்துடன் இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் நிலை குறித்து மோடியிடம் புதின் எடுத்துரைத்தார்.
அப்போது பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு புதினை கேட்டுக்கொண்டார்.
மேலும் உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவித்ததற்காகவும், சுமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு வழிகளை திறந்ததற்காகவும், இந்தியர்கள் வெளியேற உதவுவதற்காகவும் புதினுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.
இந்தியாவுக்கு உதவ ரஷியா உறுதி
இந்த உரையாடலின்போது உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளின் முக்கியத்துவத்தை புதினிடம் எடுத்துரைத்த மோடி, கடுமையான போர் நடந்து வரும் சுமி பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த புதின், உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு முடிந்த அளவு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
உக்ரைன் தாக்குதல் தொடங்கிய பிறகு ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொடர்புகொண்டு பேசுவது இது 3-வது முறையாகும்.
அதிபர் மாளிகை தகவல்
பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்கு பின் ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சுமி நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதை உறுதி செய்ய ரஷிய ராணுவ வீரர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்’ என குறிப்பிட்டு இருந்தது.
கார்கிவ் நகரில் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட இந்திய மாணவர்கள், கீவ் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட சர்வதேச அழுத்தத்தின் காரணமாக மட்டுமே அங்கிருந்து வெளியேற முடிந்தது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
உக்ரைன் போரின் மையமாக மாறியிருக்கும் சுமியில் 700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருப்பதுடன் அவர்களை மீட்க இந்திய தூதரகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story