சபரிமலை ஐயப்பன் கோவில் ஆராட்டு விழா - இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழாவிற்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு நடைபெறுவதையொட்டி, இன்று மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. பம்பையில் வரும் 18 ஆம் தேதி ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நடைபெற உள்ளது.
பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் உடனடி தரிசன முன்பதிவு வசதிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சபரிமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story