எங்களால் முடிந்தவரை போராடியுள்ளோம் - பிரியங்கா காந்தி
எங்களால் முடிந்தவரை போராடியுள்ளோம் என உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மார்ச் 10-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன.
இதற்கிடையில், இறுதிக்கட்ட தேர்தலும் நேற்று முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் லக்னோவில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, எங்களால் முடிவந்தவரை போராடியுள்ளோம். நாம் காத்திருந்து தேர்தல் முடிவுகள் என்ன என்பதை பார்ப்போம்’ என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story