உத்தரப்பிரதேச தேர்தல்: வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை "பைனாகுலர்" கொண்டு கண்காணித்த வேட்பாளர்..!!


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 8 March 2022 3:25 PM IST (Updated: 8 March 2022 3:26 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தை "பைனாகுலர் " கொண்டு வேட்பாளர் கண்காணிக்கும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஹஸ்தினாபுர்,

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் நேற்று வரை சட்டசபை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்றன

403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாகவும்,60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூரின்  சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கும், உத்தரகாண்டின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும், கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. 

இந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தை "பைனோகுலர் " கொண்டு வேட்பாளர் கண்காணிக்கும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முக்கிய தொகுதியாக மீரட் கருதப்படுகிறது. இந்த தொகுதியில் ஹஸ்தினாபுர் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் யோகேஷ் வர்மா. இவர் தனது தொகுதியில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு இன்று  தனது காரில் வந்தார்.

பின்னர் தான் வைத்திருந்த பைனாகுலரை கொண்டு காரில் சென்றவாறு அந்த இடம் முழுவதும் சுற்றி கண்காணித்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story