ஜம்மு-காஷ்மீர்; போலீசாரின் அதிரடி சோதனையில் 3 பயங்கரவாதிகள் கைது!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 March 2022 7:15 PM IST (Updated: 8 March 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா போலீசார், லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி ஆரிப் ஹாசரின் உதவியாளர்களாக செயல்பட்டு வந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.   இதுபற்றிய தகவல் அறிந்து ராஷ்டீரிய ரைபிள் படை, சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் புல்வாமா போலீசார் அடங்கிய கூட்டு குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் வாகம் பகுதியை சேர்ந்த ஆமிர் நாசிர் ஹாசர், சீனார் பாக் பகுதியை சேர்ந்த சுஹைல் அஹமத் பாட் மற்றும் நாசிர் ஹுசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி ஆரிப் ஹாசரின் உதவியாளர்களாக செயல்பட்டு வந்தனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 13 சுற்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் மேலும் பல பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புல்வாமா போலீசார் அவ்ர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட தகவலில் மேற்கண்ட தகவல்கள் புல்வாமா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story