மிரட்டி பண பறித்ததாக குற்றச்சாட்டு; 4 அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை: சிவசேனா எம்.பி


மிரட்டி பண பறித்ததாக குற்றச்சாட்டு; 4 அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை: சிவசேனா எம்.பி
x
தினத்தந்தி 8 March 2022 9:01 PM IST (Updated: 8 March 2022 9:01 PM IST)
t-max-icont-min-icon

அமலாக்கத்துறை அதிகாரிகள் பா.ஜனதாவின் ஏ.டி.எம். போல செயல்படுவதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டி உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் ஆளுங்கட்சி தலைவர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு, மத்திய விசாரணை முகமைகள் மீது ஆளுங்கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். 

இந்தநிலையில்  சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:- எப்போது எல்லாம் அமலாக்கத்துறை எதாவது நிறுவனங்களில் சோதனை நடத்துகிறார்களோ அப்போது எல்லாம், சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து ஜித்தேந்திர நவ்லானி என்பவரின் வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது. அமலாக்கத்துறை மற்றும் அதன் சில அதிகாரிகள் பா.ஜனதாவின் ஏ.டி.எம். எந்திரம் போல மாறிவிட்டனர். அதுகுறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்திலும் வழங்கி உள்ளேன்.

மும்பைபோலீசார் 4 அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிரான ஊழல், மிரட்டிபணம் பறித்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீசார் அதற்கு தகுதியானவர்கள். என்னுடைய வார்த்தையை குறித்து கொள்ளுங்கள், சில அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெயிலுக்கு போவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 


Next Story