காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை


காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை
x
தினத்தந்தி 9 March 2022 11:32 AM IST (Updated: 9 March 2022 11:32 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரின் ஸ்ரீநகர் மார்க்கெட் பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டான் உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

 பயங்கரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பராமுல்லாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Next Story