இடுக்கி: கட்சித்தாவல் குற்றத்திற்காக பஞ்சாயத்து தலைவர் பதவியை இழந்தார்..!
இடுக்கியில் கட்சித்தாவல் குற்றத்திற்காக பஞ்சாயத்து தலைவர் உறுப்பினர் பதவியை பறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
இடுக்கி,
இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி கிராம பஞ்சாயத்து 13 வார்டுகளை கொண்டது, இந்த பஞ்சாயத்தில் 9 உறுப்பினர்கள் இடதுசாரி கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது, 4 உறுப்பினர்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்ற பினு, என்பவர் 2019ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார், தொடர்ந்து பினு ராஜகுமாரி பஞ்சாயத்து தலைவர் பதவியை பெற்றார்.
தேர்தல் கமிஷன் நடவடிக்கை:-
பினு காங்கிரஸ் கட்சியை விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் எல்தோ என்பவர் தேர்தல் கமிஷன் முன்பு பினு மீது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தேர்தல் கமிஷன் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் பினு மீது நேற்று நடவடிக்கை எடுத்து பஞ்சாயத்து உறுப்பினர் பதவியை நீக்கம் செய்துள்ளது.
மேலும் ஆறு வருட காலத்திற்கு தேர்தலில் பினு நிற்கவும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பினு பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் பதவியை பறி கொடுத்துள்ளார். மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஷாஜஹான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
Related Tags :
Next Story