அசாம் நகராட்சி தேர்தல் முடிவுகள்; பாஜக முன்னிலை! ஜே பி நட்டா வாழ்த்து!!


அசாம் நகராட்சி தேர்தல் முடிவுகள்; பாஜக முன்னிலை! ஜே பி நட்டா வாழ்த்து!!
x
தினத்தந்தி 9 March 2022 4:06 PM IST (Updated: 9 March 2022 4:06 PM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநிலத்தில் 80 நகராட்சி இடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் 977 வார்டுகளை உள்ளடக்கிய 80 நகராட்சி  இடங்களுக்கான தேர்தல் மார்ச் 6 அன்று நடைபெற்றது. மார்ச் 6 அன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 2,532 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

இந்நிலையில், தேர்தலில் பதிவான  வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அசாம் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, வாக்குச்சீட்டுகளுக்கு பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்( இவிஎம்)  மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 80 நகராட்சி இடங்களில், 74 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.இதன்மூலம்,  அங்கு பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்றுவிடும் என்பது உறுதியாகிவிட்டது.

அசோம் கானா பரிஷத் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், பாஜக தலைவர் ஜேபி நட்டா தனது டுவிட்டர் பதிவில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “அசாம் மாநில நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றி, பிரதமர் மோடியின் "ஆக்ட் ஈஸ்ட்" கொள்கையை அசாம் மக்கள் வரவேற்றுள்ளனர் என்பதை வெளிக்காட்டுகிறது.

அசாம் மக்களுக்கும், அம்மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கும் நான் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மாவும் பாஜகவை வெற்றி பெறச் செய்த அசாம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Next Story