நாட்டை ஆட்சி செய்பவர்கள் வெறுப்புணர்வை பரப்புகின்றனர்; ராகுல் காந்தி பாய்ச்சல்
மக்கள் மீது கோபத்தையும், வெறுப்பையும் பரப்பி தேசத்தைப் பிளவுபடுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கோழிக்கோடு,
மக்கள் மீது கோபத்தையும், வெறுப்பையும் பரப்பி தேசத்தைப் பிளவுபடுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கோழிக்கோட்டில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி கூறியதாவது: மத்திய அரசாங்கத்தின் கோபத்தின் விளைவு பொருளாதாரத்தில் பிரதிபலிக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
மக்கள் மீது கோபத்தையும், வெறுப்பையும் ஆட்சி செய்பவர்கள் பரப்புகிறார்கள். நாட்டைப் பிளவுபடுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வெறுப்புக்கு வெறுப்பு அல்லது கோபத்துடன் பதிலளிப்பது தீர்வாகாது. வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி அன்பு மற்றும் பாசம் மட்டுமே” என்றார் ராகுல் காந்தி
Related Tags :
Next Story