உக்ரைன் போர்: ஹங்கேரி நாட்டு பிரதமர் ஆர்பனுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி...!


image courtesy: ANI
x
image courtesy: ANI
தினத்தந்தி 10 March 2022 1:24 AM IST (Updated: 10 March 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு திரும்ப வசதி செய்ததற்காக ஹங்கேரி நாட்டு பிரதமர் ஆர்பனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது  ரஷியா 15 வது நாளாக போர் தொடுத்து வருகிறது.  தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில்,உக்ரைன்-ஹங்கேரி எல்லை வழியாக 6000க்கும் மேற்பட்ட இந்திய நாடுகளை வெளியேற்றுவதற்கு வசதி செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று  ஹங்கேரிய நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பனிடம் பேசினார்.

இதில்,இரு தலைவர்களும் உக்ரைனில் நிலவும் நிலைமை குறித்து விவாதித்தனர், உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதை உறுதி செய்வதன் அவசியத்தை பற்றி விவாதித்தனர், உக்ரைனில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு திரும்ப வசதி செய்ததற்காக ஹங்கேரி அரசுக்கு பிரதமர் தனது அன்பான நன்றிகளைத் தெரிவித்தார். 

மேலும் இரு தலைவர்களும் வளர்ந்து வரும் சூழ்நிலையில் தொடர்பில் இருக்கவும், மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை ஊக்குவிக்கும் முயற்சிகளை தொடரவும் ஒப்புக்கொண்டனர் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story