5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதன் முடிவில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரியவரும்.
புதுடெல்லி,
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிப்பதில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள், முக்கிய பங்கு வகிக்கப்போகின்றன.
5 மாநில தேர்தல்
அந்த வகையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர்த்து பிறவற்றில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆளுகிறது.
உ.பி.யை பா.ஜ.க. தக்க வைக்குமா?
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 இடங்களை கொண்ட சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உ.பி.யை பா.ஜ.க. தக்க வைக்குமா என்பது தெரிய வந்துவிடும்.
பலத்த பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கையையொட்டி வெற்றி ஊர்வலங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. 75 மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
75 மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கோட்டை போன்ற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தில் 250 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர மாநில போலீஸ் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 36 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பிலும், 214 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் சட்டம், ஒழுங்கு பராமரிப்பிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பிரசாந்த் குமார் தெரிவித்தார். பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
சமாஜ்வாடி கட்சி குற்றச்சாட்டு
வாக்கு எண்ணிக்கை தொடங் குவதற்கு முன்பாகவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லும்போது நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று ஒரு அதிகாரி ஒப்புக்கொண்ட வீடியோ காட்சி, சமாஜ்வாடி கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அந்தக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாரணாசிக்கு கொண்டு சென்ற லாரிகள் தடுக்கப்பட்டதாகவும், ஓட்டுகளை திருட பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டிய நிலையில், இந்த வீடியோ காட்சி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறப்பு பார்வையாளர்கள் வருகை
அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்து வருவதால், வாக்கு எண்ணிக்கை மையங்களை கண்காணிக்க கூடுதலாக 2 சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரபிரதேசம் அனுப்பியுள்ளது.
அதன்படி பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி வாரணாசி தொகுதியிலும், டெல்லி மாநில தலைமை தேர்தல் அதிகாரி மீரட் தொகுதியையும் கண்காணிப்பார்கள்.
உத்தரகாண்ட்
உத்தரகாண்டில் 70 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடும் முழுவீச்சில் நடந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
பஞ்சாப்
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிற பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 20-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக முன்னாள் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர்சிங் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து களம் இறங்கினார். சிரோமணி அகாலிதளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி இந்த அணிகளுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கு அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 71.95 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என கூறப்படுகிறது.
காலை 8 மணிக்கு 66 இடங்களில் உள்ள 117 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூர்
பா.ஜ.க. ஆளுகிற மணிப்பூரில் 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு பிப்ரவரி 28, மார்ச் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. சுமார் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-மந்திரி பீரன் சிங், சபாநாயகர் கேம்சந்த், முன்னாள் முதல்-மந்திரி இபோபி (காங்கிரஸ்), காங்கிரஸ் தலைவர் லோகன் உள்ளிட்டவர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரிந்து விடும்.
கோவா
பா.ஜ.க. ஆட்சி நடக்கிற கோவாவில் 40 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. சுமார் 79 சதவீத வாக்குகள் பதிவாகின.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. முதல்முறையாக இங்கு பா.ஜ.க. 40 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முதன்முதலாக இங்கு வேட்பாளர்களை நிறுத்தியது. ஆம் ஆத்மியும் களத்தில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை பனாஜி அருகே சொகுசு ஓட்டலில் தங்க வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துக்கணிப்புகள் பலிக்குமா?
* உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவித்தன.
* உத்தரகாண்டில் ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் கடும் போட்டியில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆனாலும் பா.ஜ.க.வுக்கு கருத்துக்கணிப்புகள் ஆதரவாக அமைந்துள்ளன.
* பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
* மணிப்பூரில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைந்துள்ளன.
* கோவாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும், பா.ஜ.க.வை விட காங்கிரஸ் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
இந்த கருத்துக்கணிப்புகள் பலிக்குமா?, 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று தெரிந்து விடும்.

Related Tags :
Next Story