தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி
தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, 4 மாநிலங்களிலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.
அதே சமயம் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை முன்பும், வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் நாளன்றும், அதற்கு பின்பும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே கூட்டம் கூடுவதற்கும், தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் அந்த தடையை நீக்கி தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளூர் அளவில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏதேனும் கட்டுப்பாடுகளை விதித்தால், அதற்கு உட்பட்டு இந்த உத்தரவு செல்லுபடி ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story