டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி...!
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி இன்று மாலை வருகை தருகிறார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதேநிலை தொடரும் பட்சத்தில் இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 4 மாநிலங்களில் உள்ள பாஜகவினர் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பான நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தருகிறார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை உள்ள நிலையில் பிரதமர் மோடி பாஜக அலுவலகத்திற்கு வருகை தருகிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி மத்திய டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா மார்க்கில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி அலுவலகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி பாஜக தொண்டர்களிடம் பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பல முக்கிய தலைவர்களும் கட்சி தலைமையகத்தில் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story