5 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி: புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம் - பிரியங்கா காந்தி


5 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி: புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம் - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 10 March 2022 4:38 PM IST (Updated: 10 March 2022 4:38 PM IST)
t-max-icont-min-icon

5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 "மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்; எங்களது யுத்தம் தற்போது தான் தொடங்கியுள்ளது, தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Next Story