பாஜக மீது ஏழை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை 4 மாநிலங்களின் தீர்ப்பு காட்டுகிறது - பிரதமர் மோடி
4 மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சென்னை,
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில், 5-ல் 4 மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
4 மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் நாம் இடம் பிடித்திருக்கிறோம். பாஜக அரசு மீதுள்ள மக்களின் நம்பிக்கையே இந்த வெற்றி காண்பிக்கிறது.
ஹோலி மார்ச் 10-லிருந்து தொடங்கும் என தொண்டர்கள் உறுதி அளித்தனர். ஆனால் ஹோலி பண்டிகை இப்போதே தொடங்கி விட்டது. வெற்றிக்காக பணியாற்றிய பாஜக தொண்டர்களுக்கு நன்றி.
பாஜக அரசு ஏழைகளுக்கு ஆதரவான அரசு. பாஜக மீது ஏழை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை 4 மாநிலங்களின் தீர்ப்பு காட்டுகிறது. 4 மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி, ஒரு வரலாற்று சாதனை ஆகும்.
உ.பியில் 37 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சியே மீண்டும் வென்றுள்ளது. உ.பி.-யில் முதல்முறையாக பாஜக 2-வது தொடர் வெற்றி பெற்றுள்ளது.
கோவாவில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறு என நிரூபணமாகியுள்ளது. உத்தரகாண்டில் பாஜக புதிய வரலாற்றை படைத்துள்ளது. முதல்முறையாக ஒரு கட்சி மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story