கோவாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை உள்ளது - தேவேந்திர பட்னாவிஸ்
கோவாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை உள்ளது என பாஜக தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் பாஜக 5-ல் 4 மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்து கொண்டது. கோவா மாநிலத்தில் மொத்தம் 40 இடங்களில் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. இது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறியது,
பாஜக விற்கு 3 சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதம் அளித்துள்ளனர். எம்.ஜி.பி. கட்சியும் ஆதரவு கடிதம் அளித்துள்ளதால், 20+3+2 = 25 எம்.எல்.ஏ.க்கள் என பா.ஜ.ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் உள்ளது. வரும் தேர்தல்களில் (கர்நாடகா தேர்தல்) நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்களைப் பொறுத்தவரை வெற்றி என்பது கூடுதல் பொறுப்பு என்றார்.
Related Tags :
Next Story