மணிப்பூரில் 32 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சி ..!
மணிப்பூர் சட்டசபையில் 32 இடங்களைக் கைப்பற்றி உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது.
இம்பால்,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
முன்னதாக உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதி தொடங்கியது. மார்ச் 7ஆம் தேதி 7வது கட்டமாக நிறைவடைந்தது. இதேபோல உத்தராகண்ட் மாநிலத்தின் 70 தொகுதிகள் , பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள் மற்றும் கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில் ஒரே காட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்ததுடன், மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் மணிப்பூரில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 32 இடங்களைக் கைப்பற்றி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகி உள்ளது. மணிப்பூர் சட்டசபையில் 32 இடங்களைக் கைப்பற்றி உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது.
இதன்படி மணிப்பூர் மாநிலத்தில்
பா.ஜ.க 32 இடங்களில் வெற்றி
ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி
தேசிய மக்கள் கட்சி 6 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி
நாகா மக்கள் முன்னணி 5 இடங்களில் வெற்றி
சுதந்திர கட்சி 3 இடங்களில் வெற்றி
குக்கி மக்கள் கூட்டணி 3 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பா.ஜ.க. ஆளுகிற மணிப்பூரில் 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு பிப்ரவரி 28, மார்ச் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. சுமார் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
#ManipurAssemblyelectionsResults | BJP confirmed its return to power in Manipur, with the party bagging 32 seats in the 60-member Assembly, according to the Election Commission website. pic.twitter.com/64sV1Ug7xx
— ANI (@ANI) March 10, 2022
Related Tags :
Next Story