47 இடங்களைக் கைப்பற்றி உத்தரகாண்டில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க..!!
உத்தரகாண்டில் 47 இடங்களைக் கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது.
டேராடூன்,
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பொறுத்தவரையில், பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் முடிவடைந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 47 இடங்களைக் கைப்பற்றி, உத்தரகாண்டில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதை உறுதி செய்துள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில்
பா.ஜ.க 47 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி + (1 இடத்தில் முன்னிலை)
சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி
பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் (1 இடத்தில் முன்னிலை) வெற்றிபெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காதிமா தொகுதியில் போட்டியிட்ட உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரியும், பாஜக வேட்பாளருமான புஷ்கர் சிங் தாமி பின்னடைவை சந்தித்து வந்தநிலையி, அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
Related Tags :
Next Story