தென் கொரியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து


தென் கொரியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 11 March 2022 7:42 AM IST (Updated: 11 March 2022 7:42 AM IST)
t-max-icont-min-icon

தென் கொரியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தென் கொரியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும், மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடும் போட்டியாக விளங்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்றார். 

இந்நிலையில் தென் கொரியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள யூன் சுக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியா - தென்கொரியா உறவை மேலும் வலுப்படுத்தவும், விரிவுப்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story