இமாச்சலப் பிரதேசம்: 2 பேர் உயிரிழந்ததையடுத்து பாரா கிளைடிங் சாகசத்திற்கு தடை..!
இமாச்சலப் பிரதேச மாநிலம் கங்ரா மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்ததையடுத்து பாரா கிளைடிங் சாகசத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கங்ரா,
இமாச்சலப் பிரதேச மாநிலம் கங்ரா மாவட்டத்தில் பாரா கிளைடிங் சாகசத்தின் போது 2 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு பாரா கிளைடிங் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 8-ந்தேதி பிர் பகுதியில் பாரா கிளைடிங் சாகசத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் பாரா கிளைடிங் அங்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கங்ரா மாவட்டத்தின் துணை காவல் ஆணையர் நிபுன் ஜின்டால் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து எப்ஐஆர் பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது.
Related Tags :
Next Story