காதலனுடன் சேர்ந்து குழந்தை கொலை: பாட்டியின் மகனை விரட்டி அடித்த உறவினர்கள்


Image courtesy:onmanorama.com
x
Image courtesy:onmanorama.com
தினத்தந்தி 11 March 2022 6:04 PM IST (Updated: 11 March 2022 6:04 PM IST)
t-max-icont-min-icon

காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்று போலீசில் சிக்கிய பாட்டியின் மகனை அடித்து விரட்டிய உறவினர்கள், அவரது காரையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் பள்ளுருத்தி பகுதியை சேர்ந்தவர் ஜான் பினாய் டிக்குரூஸ் (வயது 28 ) இவர் எர்ணாகுளத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு கோடசேரி பகுதியைச் சேர்ந்த சிப்சி ( 52) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது.  சிப்சி மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிப்சியின் மகன் சஜீவ் . இவரது மனைவி டிக்ஸி (30). இருவருக்கு  இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்

மனைவி டிக்ஸி குழந்தைகளின் நலன் கருதி துபாய்க்கு வேலைக்கு சென்று உள்ளார். இதனால் தனது 
2 குழந்தைகளையும் மாமியார் சிப்சியின் பெறுப்பில் விட்டு சென்று உள்ளார்.

இந்த நிலையில் சிப்சியின் முறைதவிரிய வாழ்கை முறையால் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருந்து உள்ளார். அந்த வகையில் நேற்று தனது கள்ளக்காதலன் ஜான் பினாய் டிக்குரூசுடன் கொச்சி ஓட்டலில்  அறை எடுத்து தங்கி உள்ளார்.

அப்போது பொறுப்பில் சிப்சி 2 குழந்தைகளையும் காதலினிடம்  ஒப்படைத்து விட்டு வெளியே சென்று உள்ளார்.

அப்போது குழந்தை மலம் கழித்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  ஜான் பினாய் கழிவறையில் உள்ள பக்கெட்டில் நீரில் குழந்தையை மூழ்கடித்து கொலை செய்து உள்ளார்.

பின்னர் இந்த தகவலை  சிப்சியிடம் தெரிவித்து உள்ளார். விரைந்து வந்த சிப்சி குழந்தையை மருத்துமனைக்கு எடுத்து சென்று உள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தைக்கு என்ன பிரச்சினை என்று மருத்துவர்கள் கேட்டதற்கு பால் குடிக்கும் போது குழந்தை மூச்சு திணறி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இதனை அறிந்த போலீசார் குழந்தையின் உயிரிழப்பு குறித்து சிப்சியிடம் விசாரணை நடத்திய போது தனது கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சிக்ஸியின் மகனான  சஜீவ், குழந்தையின் இறுதி சடங்கு  நிகழ்ச்சிக்கு காரில் வந்த போது மனைவியின் உறவினர்களிடம் சிக்கிக் கொண்டார். வயதான தாயை அடக்கி வைக்கத் தெரியாததால், தங்கள் குழந்தையின் உயிர் பறிபோய் விட்டதே என்று ஆத்திரம் அடைந்த உறவினர்கள்  சஜீவ் காரை அடித்து நொறுக்கினர்.

தனக்கும் அந்த சம்பவத்துக்கும் சம்பந்தம் கிடையாது, குழந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுங்கள் என்று  சஜீவ் காரில் இருந்து இறங்கிய நிலையில் ஆளுக்கு ஒரு பக்கம் அவருக்கு அடிவிழுந்தது.

பெற்ற குழந்தையை கவனிக்காமல் எங்கே சென்றாய் எனக்கேட்டு,வீட்டுக்குள் செல்ல முயன்ற பிஜூஸை சட்டையைப் பிடித்து இழுத்துவந்து தலையில் தட்டி தர்ம அடி கொடுத்து காரில் ஏற்றினர்.

கொலைப் பழிக்கு ஆளான தாயின் தவறான நடவடிக்கையால், பெற்ற குழந்தையின் துக்க நிகழ்ச்சியில் கூட பங்கேற்க இயலாமல்  சஜீவ் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டது. உறவினர்களின் தாக்குதலுக்கு பின்னர் தாமதமாக வந்த போலீசார், அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

Next Story