கேரள பட்ஜெட்: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
கேரள பட்ஜெட்டில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு படிப்பு தேவைக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள சட்டப்பேரவையில் இன்று 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி கே.என். பால கோபால் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கியதன் முக்கிய நோக்கம், மாணவர்களின் கல்விக்காகவும், அவர்களின் எதிர்கால கல்வித் திட்டங்களை எளிதாக்கும் வகையிலும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும், மாணவர்களின் தொலைந்து போன மற்றும் பிற மதிப்புமிக்க ஆவணங்களை மீட்டெடுக்கவும் தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கும் என்று நிதி மந்திரி கே.என். பால கோபால் கூறினார்.
Related Tags :
Next Story