மராட்டியத்தில் புதிதாக 318 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் புதிதாக 318 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 78 லட்சத்து 70 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 லட்சத்து 19 ஆயிரத்து 949 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலத்தில் 2 ஆயிரத்து 925 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் ஒருவர் தொற்றுக்கு பலியானார். இதுவரை வைரஸ் நோய்க்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 750 பேர் உயிரிழந்து உள்ளனர். தலைநகர் மும்பையில் புதிதாக 54 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவுமில்லை. நகரில் இதுவரை 10 லட்சத்து 57 ஆயிரத்து 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story