15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - ஓட்டலில் அரங்கேறிய கொடூரம்


15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - ஓட்டலில் அரங்கேறிய கொடூரம்
x
தினத்தந்தி 12 March 2022 5:42 AM IST (Updated: 12 March 2022 5:55 AM IST)
t-max-icont-min-icon

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுகாத்தி,

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதேபகுதியை சேர்ந்த 2 பேர் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அந்த செயலை செல்போனில் வீடியோவாக எடுத்துள்லனர்.

இந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால், அஞ்சிய அந்த சிறுமி நடந்த கொடூரம் குறித்து யாரிடமும் கூறவில்லை.

இதனை தொடர்ந்து அந்த 2 பேரும் கடந்த பிப்ரவரி 19-ம் அந்த சிறுமியை ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனால், அந்த சிறுமி ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த 2 பேரும் தனது நண்பர்கள் மேலும் 3 பேருடன் சேர்ந்துகொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாய் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story