சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 March 2022 12:45 PM IST (Updated: 12 March 2022 12:45 PM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுடெல்லி, 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெற்றன. மேலும் 12ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றன. இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான முடிவுகள் ஆஃப்லைன் முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் அனுப்பி உள்ளது. மேலும், உள் மதிப்பீடு/நடைமுறை மதிப்பெண்கள் ஏற்கனவே பள்ளிகளில் உள்ளன என்றும், எழுத்து தேர்வு முடிவுகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Next Story