கட்டண சலுகை கேட்ட மாணவ-மாணவியரின் பெற்றோரை பெண் அடியாள் மூலம் தாக்கிய பள்ளி
கட்டண சலுகை கேட்ட பள்ளி மாணவ - மாணவியரின் பெற்றோர் பெண் அடியாள் மூலம் மிரட்டப்பட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பைப்விவாடி நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு சில விதிமுறைகள் படி கட்டண சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ஆனால், அந்த பள்ளியில் பயிலும் 2 மாணவர்களின் பெற்றோர் தங்கள் செலுத்திய கட்டண சலுகை விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும்படி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.
அப்போது, அந்த பள்ளி நிர்வாகத்தால் அங்கு நியமிக்கப்பட்டுள்ள பெண் அடியாள் மாணவர்களின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியும், தகாத வார்த்தையாலும் திட்டியுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளியில் பணி புரிந்து வரும் பெண் அடியாள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story