இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள கட்சிக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 ம்ாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப்பை ஆம் ஆத்மியும், மீதமுள்ள 4 மாநிலங்களை பா.ஜனதாவும் கைப்பற்றின.
ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், 5 மாநில தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியும், விரக்தியும் அதிகரித்து வரும் நிலையில் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரியக்கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி ஒரு மாத இடைவேளைக்குப்பின் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள கட்சிக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம், டெல்லி ஜன்பாத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது.
The meeting of the parliamentary strategy group of Congress called by Congress Parliamentary Party (CPP) chairperson Sonia Gandhi has been rescheduled to 10 am today at 10 Janpath.
— ANI (@ANI) March 13, 2022
Related Tags :
Next Story