5-வயது சிறுவனை கொலை செய்த நபரை உயிருடன் எரித்த உள்ளூர் மக்கள்..!
5-வயது சிறுவனை கொலை செய்த நபரை உள்ளூர் மக்கள் உயிருடன் எரித்து கொன்றனர்.
திப்ருகர்,
அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் 5-வயது சிறுவனை கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை உள்ளூரைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிருடன் எரித்துக் கொன்றனர்.
முன்னதாக, உஜ்ஜல் முரா என்ற 5-வயது சிறுவன் சக சிறுவர்களுடன் சேர்ந்து சுனித் தந்தி என்பவருடைய வீட்டின் வளாகத்திற்குள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். திடீரென கோபமடைந்த சுனித் விளையாடிக் கொண்டிருந்த உஜ்ஜல் முராவை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். சுனித் தந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுவனை சுனித் கொலை செய்ததை அறிந்த உள்ளூரைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுனித் தந்தியை உயிருடன் எரித்து கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் மற்றும் சுனித்தின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Related Tags :
Next Story