மாநிலங்கள் கையிருப்பில் 17.42 கோடி டோஸ் தடுப்பூசிகள் - மத்திய சுகாதாரத்துறை
இதுவரை 182 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 930 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
மாநிலங்கள் கையிருப்பில் 17.42 கோடி டோஸ் தடுப்பூசிகள் மீதமுள்ளன என்று மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 17 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 896 டோஸ் தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் மீதமுள்ளன.
இதுவரை 182 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 930 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசிகளை மாநிலங்கள் நேரடி கொள்முதல் முறையில் பெற்றுள்ளன என்று மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story