ஆன்லைன் உணவு வினியோகம் மூலம் போதை பொருள் விற்பனை செய்த வாலிபர் கைது...!


ஆன்லைன் உணவு வினியோகம் மூலம் போதை பொருள் விற்பனை செய்த வாலிபர் கைது...!
x
தினத்தந்தி 13 March 2022 2:50 PM IST (Updated: 13 March 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் உணவு வினியோம் மூலம் போதை பொருள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளி நகரின் மதுவிலக்கு துறை அதிகாரியாக அனிபா என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த பகுதியில் ஆன்லைன்  உணவு பொருட்கள் வினியோகத்தின் மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரி அனிபாவுக்கு  ரகசிய தகவல் வந்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசாருடன் சென்ற அதிகாரி அனிபா ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் நிதின் ரவீந்திரன் (வயது 27) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்.

அப்போது ரவீந்திரன் பாக்கெட்டில் 2 கிராம் போதை பொருள் இருந்து உள்ளது. பின்னர் ரவீந்திரனை கைது செய்த அதிகாரிகள், அவர் வந்த இருசக்கர வாகனத்தையும், 2 கிராம் போதை பொருளையும் பறிமுதல் செய்துனர்.

ஆன்லைன் உணவு வினியோகம் மூலம் போதை பொருள் விற்பனை நடந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. 


Next Story