சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங். காரிய கமிட்டி கூட்டம் நிறைவு
டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நிறைவு பெற்றது.
புதுடெல்லி,
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு டெல்லியில் முதல்முறையாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று இருக்கலாம் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மூத்த நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் பரவலாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story