ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி; துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரெயில்வே கான்ஸ்டபிள்


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி; துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரெயில்வே கான்ஸ்டபிள்
x
தினத்தந்தி 13 March 2022 6:53 PM IST (Updated: 13 March 2022 6:53 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் உயிரை காப்பாற்றிய நேத்ரபால் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வதாலா ரெயில் நிலையத்தில், ஓடுகின்ற மின்சார ரெயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் ஒருவர் பிளாட்பாரத்தில் தவறி விழுந்தார். அப்போது ரெயிலின் வேகம் அதிகரித்ததால், அந்த நபர் ரெயிலோடு சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். 

ரெயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில் மாட்டிக் கொள்ள இருந்த அந்த நபரை, அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நேத்ரபால் சிங், ஓடிச் சென்று காப்பாற்றினார். துரிதமாக செயல்பட்டு உடனடியாக அந்த நபரை வெளியே இழுத்ததால், அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. 

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பயணிகள் சிலர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த போது, அந்த நபர் ரெயிலில் இருந்து இறங்க முயல்வதும், பின்னர் தவறி விழுந்த நபரை நேத்ரபால் சிங், ஓடிச் சென்று காப்பாற்றியதும் கேமராவில் பதிவாகி உள்ளது. வேகமாக செயல்பட்டு பயணியின் உயிரை காப்பாற்றிய நேத்ரபால் சிங்கிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Next Story