டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.38 சதவிகிதமாக குறைவு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 132 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில், தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 132- பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.38 சதவிகிதமாக குறைந்துள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 62 ஆயிரத்து 934- ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 141- ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 34 ஆயிரத்து 994 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நேற்று 161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. பாதிப்பு விகிதம் 0.44 ஆக பதிவாகியிருந்தது. கொரோனா பாதிப்புக்கு நேற்று ஒருவர் உயிரிழந்து இருந்தார்.
Related Tags :
Next Story