இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,503 ஆக சரிவு...!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை வீழ்ச்சிப்பயணத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. நேற்று முன்தினம் 3,614 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 3,116 ஆக சரிந்தது. இது 676 நாட்களில் மிகக்குறைந்த அளவு ஆகும்.
இந்நிலையில் இன்று புதிதாக 2,503 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 503 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,93,494 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,15,877 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 4,377 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,41,449 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 36,168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,80,19,45,779 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,61,318 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 5,32,232 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 77,90,09,901 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story