இந்தியாவில் பெட்ரோல் விலையை ஏற்றவில்லை - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் விலையை உயர்த்திய போதும், இந்தியா உயர்த்தவில்லை.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அவையில் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி ஹர்தீப் சிங் பூரி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் விலை உயர்த்திய போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலையை ஏற்றவில்லை என்று கூறினார்.
மேலும் பிற நாடுகள் பெட்ரோல் விலையை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்திய போதும், இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story