இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 14 March 2022 2:21 PM IST (Updated: 14 March 2022 3:08 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் (புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பின் வீரியம் குறைவாக இருப்பதற்கு தடுப்பூசியே முக்கிய காரணியாக உள்ளதாக சுகாதார நிபுணர்களும்  தெரிவித்துள்ளனர். இதனால், தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. 

இந்த நிலையில், இந்தியாவில்  12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு  நாளை மறுநாள் முதல் (புதன்கிழமை)  கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதேபோல், 60-வயதுக்கு மேற்பட்ட அனைவரும்  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

 12-14  வயதுடைய அனைவருக்கும் கார்பேவாக்ஸ் (Corbevax) என்ற தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த மருந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இவான்ஸ் (Biological Evans) என்ற மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது.


Next Story