விமானங்களில் கத்தியை எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்


விமானங்களில் கத்தியை எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
x
தினத்தந்தி 14 March 2022 2:36 PM IST (Updated: 14 March 2022 2:36 PM IST)
t-max-icont-min-icon

கிர்பான் எனப்படும் கத்தியை விமானங்களில் எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.

புதுடெல்லி,

கிர்பான் எனப்படும் கத்தியை விமானங்களில் எடுத்து செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது. இதுகுறித்து மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் வெளியிட்ட தகவலில்,  உள்நாட்டிற்குள் பயணிக்கும் இந்திய விமானங்களில் மட்டும் சீக்கிய பயணிகள் கிர்பானை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

 சீக்கியர்கள் எடுத்துச் செல்லும் கிர்பானின் அளவு 22.86 செ.மீ. மற்றும் பிளேடு எனப்படும் கத்தியின் அளவு 15.24 செ.மீ.க்கு அதிகமாக இருக்கக் கூடாது” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, சக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான கடத்தலை தடுக்க விமானங்களில் கத்தியை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story