‘கச்சா பாதாம்’ பாடலுக்கு அருமையாக நடனமாடும் சிறுமி! இணையத்தை கலக்கும் வீடியோ!!


‘கச்சா பாதாம்’ பாடலுக்கு அருமையாக நடனமாடும் சிறுமி! இணையத்தை கலக்கும் வீடியோ!!
x
தினத்தந்தி 14 March 2022 4:01 PM IST (Updated: 14 March 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் உள்ள ஒரு சுட்டி சிறுமி கை கால்களை அசைத்து அருமையாக நடமாடுகிறார்.

மும்பை,

வங்காள மொழிப் பாடலான ‘கச்சா பாதாம்’ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளது.உலகின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்து அந்த பாடலுக்கு ஆடி வீடியோவாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிறுமி ஒருவர் இந்த பாடலுக்கு ஆடும் வீடியோ இப்போது டுவிட்டரில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவானிஷ் சரன், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பள்ளி சீருடையில்  உள்ள  ஒரு சுட்டி சிறுமி கை கால்களை அசைத்து அருமையாக நடமாடுகிறார். இந்த வீடியோவை இதுவரை 11 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். 1 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 

இந்த பாடலை பாடி, மேற்கு வங்கத்தை சேர்ந்த பூபன் பத்யாகர் என்ற கடலை வியாபாரி ஒரே இரவில் பிரபலமானார். அவர் தனது வியாபாரத்தை பெருக்குவதற்காக பிரபல பாடலான கச்சா பாதாம் பாடலை  ஒற்றை வரியாக மாற்றி அந்த  பாடலை பாடி கடலை விற்றார்.அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்தது. 

அதன்பின், அந்த பாடலை இசையமைப்பாளர் நஸ்மு ரீசட்  ‘ரீமிக்ஸ்’  செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இப்போது அந்த பாடல் பலரையும் ஆட்டம் போட வைத்துள்ளது. அதற்கு சிந்துவும் விதிவிலக்கல்ல!

Next Story