பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திவிட்டு விஷம் குடித்த வாலிபர் - பரபரப்பு சம்பவம்


பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திவிட்டு விஷம் குடித்த வாலிபர் - பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 14 March 2022 7:00 PM IST (Updated: 14 March 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய பின்னர் அந்த வாலிபர் விஷம் குடித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் வெட்ஹான் ஷுரி என்ற பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்கூடத்திற்குள் இன்று காலை 11 மணியளவில் 21-வது நிரம்பிய வாலிபர் ஒருவர் வந்தார். அந்த வாலிபர் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு அறைக்கு சென்றார்.

வகுப்பறையில் ஆசிரியர் யாரும் இல்லாத நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அங்கு இருந்த ஒரு மாணவியை குத்தியுள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அலறியுள்ளார்.

இதனையடுத்து, சக மாணவர்கள், ஆசிரியர்கள் விரைந்து வருவதற்குள் கத்திக்குத்து நடத்திய வாலிபர் பள்ளியில் இருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் வீட்டிற்கு சென்று அந்த வாலிபர் தானும் விஷம் குடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவலறிந்து, தாக்குதல் நடத்திய வாலிபரின் வீட்டிற்கு சென்ற போலீசார் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த மாணவிக்கும், தாக்குதலை நடத்திவிட்டு விஷம் குடித்த வாலிபருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதல் விவகாரத்தில் பள்ளி மாணவி மீது 21 -வது நிரம்பிய வாலிபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு விஷம் குடித்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story