மக்களவையில்பிரதமர் மோடியை எழுந்து நின்று வரவேற்ற பா.ஜனதா எம்.பி.க்கள்
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்காக பிரதமர் மோடியை கட்சி தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி காலையில் மக்களவைக்கு வந்தார்.
அப்போது அவையில் இருந்த பா.ஜனதா உறுப்பினர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி பிரதமர் மோடியை வரவேற்றனர். சில எம்.பி.க்கள் ‘மோடி... மோடி...’ என கோஷங்களும் எழுப்பினர்.
மூத்த மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பிரதமரை எழுந்து நின்று வரவேற்றனர்.
அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் அவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story