98 நாடுகளுக்கு இந்தியா 16.29 கோடி தடுப்பூசி வினியோகம்
98 நாடுகளுக்கு இந்தியா 16.29 கோடி தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி வினியோகம் பற்றிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் நேற்று எழுத்துமூலம் பதில் அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
மத்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த மாதம் 21-ந் தேதி அளித்துள்ள தகவல்படி, மொத்தம் 16.29 கோடி தடுப்பூசிகள் 98 நாடுகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசிகளுடன் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள், பாதுகாப்பு கவசங்கள், தெர்மோ மீட்டர்கள், சிரிஞ்சிகள், சோதனை கருவிகள் உள்ளிட்டவை 65 நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story