பஞ்சாப் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார் பகவந்த் மான்...!
பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று, இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. பஞ்சாபின் முதல் மந்திரி வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார்.
இந்த நிலையில், பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார். பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் முதல் மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்க உள்ளார்.
இந்த விழாவில் பஞ்சாப் மக்கள் திரளாகப் பங்கேற்கும் படி அவர் அழைப்பு விடுத்திருப்பதால் சுமார் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.
Related Tags :
Next Story